அயோத்தி அடிக்கல் நாட்டு விழா: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை!

நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருகிற 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.30க்கு தொடங்கி 12.40க்குள் நடைபெறும். முன்னதாக 11.15க்கு மோடி விழா நடைபெறும் இடத்துக்கு வரவுள்ளார்.

இந்நிலையில் அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில கமாண்டோ போலீசார் 200 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Most Popular

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய...

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மேலும் 95...

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...