அயோத்திக்கு 17,400 கிலோ வெள்ளி செங்கல் அனுப்பிய சேலம் பா.ஜ.க!

 

அயோத்திக்கு 17,400 கிலோ வெள்ளி செங்கல் அனுப்பிய சேலம் பா.ஜ.க!

அயோத்தியில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணி நடைபெற உள்ள நிலையில் சேலம் பா.ஜ.க சார்பில் 17.400 கிலோ வெள்ளி செங்கல் அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அயோத்திக்கு 17,400 கிலோ வெள்ளி செங்கல் அனுப்பிய சேலம் பா.ஜ.க!
வருகிற 5ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகிறது. பிரதமர் பங்கேற்க உள்ளார் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. பொது மக்கள் கூடுவதைத் தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அயோத்திக்கு 17,400 கிலோ வெள்ளி செங்கல் அனுப்பிய சேலம் பா.ஜ.க!இந்த பூமி பூஜையின் போது நாட்டில் உள்ள புண்ணிய நதிகள் மற்றும் இடங்களில் இருந்து தண்ணீர், மண் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் தங்கள் பகுதியின் சிறப்புப் பொருட்களை பூஜைக்காக அனுப்பி வருகின்றனர்.

அயோத்திக்கு 17,400 கிலோ வெள்ளி செங்கல் அனுப்பிய சேலம் பா.ஜ.க!
சேலத்தில் பா.ஜ.க சார்பில் ரூ.12 லட்சம் செலவில் 17,400 கிலோ எடை கொண்ட வெள்ளியில் செங்கல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பா.ஜ.க மாதவத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த வெள்ளி செங்கல் வருகிற 3ம் தேதி அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டு ஶ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று சேலம் பா.ஜ.க-வினர் தெரிவித்துள்ளனர்.