அயோத்தி ராமஜென்ம பூமி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா… பக்தர்கள் அதிர்ச்சி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடக்க விழா அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் ராமஜென்ம பூமி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க

உள்ளது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்க உள்ளதால் ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உள்ள தற்காலிக ராமர் கோவிலில் பிரதீப் தாஸ் என்பவர்தான் தினமும் பூஜைகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத் ராமஜென்ம பூமிக்கு வரும்போது எல்லாம் அவர்தான் பிரதீப் தான் பூஜை செய்வார்.

தற்போது அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருடன் சேர்த்து 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோவிலில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று வி.ஐ.பி-க்களுக்கு பரவுவதைத் தடுக்க பூசாரி உள்ளிட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Most Popular

“நடுவுல அழகி ,லெப்ட்ல மானேஜர் ,ரைட்ல சர்வர் “-தாய்லாந்து நாட்டு பெண்ணை கட்டிலில் கூட்டு பலாத்காரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள்..

கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஒரு தாய் லாந்துநாட்டு அழகி கொரானா காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த நாட்டுக்கு திரும்பி போக முடியாமல்...

ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

சென்னையில் பட்டப்பகலில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சினிமா விஞ்சம் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது (29)...

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : எம்பி திருமாவளவன் வலியுறுத்தல்!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள்...

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...