செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!

 

செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!

கரூர்

குளித்தலை அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வைகைபுதூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மகள் வைஷ்ணவி (22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், வைஷ்ணவி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த வைஷ்ணவி, கடந்த 26ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!

இதில், பலத்த தீக்காயமடைந்த வைஷ்ணவியை, உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் வைஷ்ணவி உயிரிழந்தார்.

இதுகுறித்து, வைஷ்ணவி தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.