தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி!

 

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி!

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள கீழதட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (44). இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனந்தன், அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று லாரி வாங்கினார்.

ஆனால் போதிய வருமானம் இல்லாததால், கடந்த 2019ஆம் ஆண்டு லாரியை, மாப்பிள்ளையூரணியை சேர்ந்த நியாய விலை கடை ஊழியர் சுப்பிரமணியன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதற்காக 50 ரூபாய் பணம் கொடுத்த சுப்ரமணியன், பின்னர் லாரிக்கு செலுத்த வேண்டிய தவணையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி!

இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆனந்தன், இன்று தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென தான் கொண்டுவந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்டு அருகில் இருந்த போலீசார் ஆனந்தன் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சிப்காட் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தீக்குளிப்பு சம்பவம் காரணமாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.