கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு!

கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு!

கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்று அதிகமாகி வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு!

இந்நிலையில் இதுகுறித்து கூறிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிட ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 23,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. 43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் மீதமுள்ள கருவிகள் ஒரு சில தினங்களில் வாங்கப்படும்” என்றார்.