கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு- அமைச்சர் விஜயபாஸ்கர்

 

கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,713 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக உள்ளது சுமார் 51 ஆயிரம் பேர் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு- அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “நாட்டிலேயே தமிழகத்தில்தான் 10 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்குத் தேவையான விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். மதுரையைப் பொறுத்தவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை.மதுரையில் தேவையான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளது. மதுரை மாவட்டத்திற்கு தேவையான வசதியை செய்ய சுகாதார துறை தயாராக உள்ளது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை அதே நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் 1800 படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது. கொரோனோ வைரஸ் மட்டுமே எதிரி கொரோனோ நோயாளி எதிரியல்ல. இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் தமிழகத்தில் குறைந்த அளவாக உள்ளது. தமிழகத்தில் இறப்பு சதவீதம் 1.3 அளவாகவே உள்ளது ” என தெரிவித்தார்.