தமிழகத்தில் சமூக பரவலா?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

 

தமிழகத்தில் சமூக பரவலா?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இன்று மட்டும் 4,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 56.94 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 75,000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதி நவீன கருவிகளுடன் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையில் அமைகிறது. அறிகுறி இல்லாதவர்கள், இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அக்கறையுடன் சிகிச்சை வழங்குகிறோம்.

தமிழகத்தில் சமூக பரவலா?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

நோயறிகுறிகள் உள்ளவர்கள் இல்லாதவர்கள் என இரண்டு பேரையும் அரசு ஒரே விதமாகத் தான் கவனித்து வருகிறது. வயதிலேயே மூத்தவர்கள், கேன்சர்,இதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு நோய் சேரும்பொழுது மருத்துவர்களுக்கு சவாலாக இருக்கிறது. பிற நோய்களுடன் கோவிட் தொற்றும் ஏற்படும் போது மருத்துவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக புதிய சிடி ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கிண்டியில் 750 படுக்கைகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் மாநிலத் நிதியில் 93 சதவீத டெஸ்ட் கிட் வாங்கப்படுகிறது. முன்களப்பணியாளர்களுக்கு Zinc, ஆர்செனிக் ஆல்பம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. வீடுதேடி சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கிறோம்” என தெரிவித்தார்.