13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 1,200 பேருக்கு தான் பாதிப்பு- சென்னை மாநகராட்சி ஆணையர்

 

13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 1,200 பேருக்கு தான் பாதிப்பு- சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “அனைத்து சமூக வலைதளங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி வரக்கூடிய நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது. சென்னையில் இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள பட்டிருக்கிறது. அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 1,200 பேருக்கு தான் பாதிப்பு- சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் மட்டும் இதுவரை 18 ஆயிரம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்கு மட்டுமே 200 கோடி செலவானது. சுமார் 400 கோடி ரூபாய் சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது. களப்பணியாளர்களுக்கு உணவு அளிக்க 30 கோடி செலவு செய்யப்பட்டது. முன்பு 4,000 பரிசோதனை செய்தாலே 1,500 பேருக்கு பாசிட்டிவ் என்ற நிலை இருந்தது. தற்போது 13,000 பேருக்கு பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது” எனக்கூறினார்.