‘ கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரையை தவிர்க்கவும்’ மத்திய சுகாதாரத் துறை

‘ கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரையை  தவிர்க்கவும்’ மத்திய சுகாதாரத் துறை

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்றல் இந்த அண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் அதிவேகமாகப் பரவி வருகிறது. தமிழகம் இந்திய அளவில் நோய்த் தொற்றலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்திலும் டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நோய்த் தொற்று அதிகமாக இருந்தாலும் நோயிலிருந்து விரைவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, இறப்பு விகிதம் குறைவான அளவில் இருப்பதுமே இதில் ஆறுதல் அளிக்கும் செய்திகள்.

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அவ்வப்போது வழிகாட்டல்களை அளித்துவருகிறது. தற்போது அது தந்திருக்கும் வழிகாட்டலை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

‘ கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரையை  தவிர்க்கவும்’ மத்திய சுகாதாரத் துறை
 (PTI Photo/R Senthil Kumar)(PTI17-03-2020_000204A)

அதில், ‘மிதமான மற்றும் நடுத்தர பாதிப்புடைய கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் (HCQ) பயன்படுத்த வேண்டும், தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு அதைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மிதமான பாதிப்பு நோயாளிகளில், அதிக உடல்நல பிரச்னையுடைய நோயாளிகளுக்கு, அதாவது 60 வயதுக்கு குறைவானவர்கள், உயர் ரத்தழுத்தம், நீரிழிவு, நீடித்த நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் நோய், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் உடல்பருமன் பிரச்னை உடையவர்களுக்க தீவிர மருத்துவ மேற்பார்வையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையைப் பயன்படுத்த வேண்டும்.

‘ கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரையை  தவிர்க்கவும்’ மத்திய சுகாதாரத் துறை

நடுத்தர பாதிப்பு நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனைக்குப் பின்பே ஹைட்ராக்கி குளோரோகுயினைப் பயன்படுத்த வேண்டும். இது தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவ பரிந்துரை இல்லாமல், ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரை பயன்படுத்தக் கூடாது’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.