பேஸ்புக் பதிவால் பெங்களூரில் கலவரம் : 2 பேர் உயிரிழப்பால் பெங்களூருவில் 114 தடை உத்தரவு!

பேஸ்புக் பதிவால் பெங்களூரில் கலவரம் : 2 பேர் உயிரிழப்பால் பெங்களூருவில் 114 தடை உத்தரவு!

பெங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரை ஏற்க மருத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திடீரென்று வன்முறை வெடித்தது. ஒரு கட்டத்தில் கற்கள் வீசப்பட்டதோடு, வாகனங்களும் தீ வைக்கப் பட்டன. பைசந்திரா பகுதியில் உள்ள எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடு கற்களால் தாக்கப்பட்டது. இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

பேஸ்புக் பதிவால் பெங்களூரில் கலவரம் : 2 பேர் உயிரிழப்பால் பெங்களூருவில் 114 தடை உத்தரவு!

இதை தொடர்ந்து நிலைமை மோசமானதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவர் பலியான நிலையில் 60ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் எடியூரப்பா, அமைதியை நிலைநாட்டுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேஸ்புக் பதிவால் பெங்களூரில் கலவரம் : 2 பேர் உயிரிழப்பால் பெங்களூருவில் 114 தடை உத்தரவு!

இந்நிலையில் பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவும், டி.ஜி.ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.