கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னாவை மேலும் 4 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி!

 

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னாவை மேலும் 4 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி!

கேரளாவில் தங்ககடத்தல் வழக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தின் மூலம் பெங்களூருக்கு வந்த 30 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இதன் பின்னணி ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் உள்ளிட்ட பலர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல, கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்துக்கும் கூட இதில் சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டது.

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னாவை மேலும் 4 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி!

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கேட்டு அவர்கள் மனு அளித்திருந்தனர். ஆனால் ஸ்வப்னாவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே என்ஐஏ அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரூ.100 கோடிக்கும் மேல் கறுப்புப்பணம் மோசடி நடந்துள்ளதாகவும் கறுப்பு பணத்தை துபாயில் இருந்து பரிமாற்றம் செய்து தங்கமாக்கி இந்தியாவிற்கு கடத்தி வந்ததாகவும் தங்கக்கடத்தலில் பன்னாட்டு கும்பலுடன் இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் காவல் நீடிக்கப்பட்டது.