×

” திமுக தேர்தல் பணிகளை துவங்க கூடாது என்பதற்காக தான் இ-பாஸ் நடைமுறையில் உள்ளது ” : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்றின் வீரியம் குறைந்து வருவதால் அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகளும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த ஊரடங்கால் தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த தாண்டவமுத்து என்று ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க 5 மாதங்களாக அண்ணாநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கான கால அவகாசம் முடிவடைந்ததாக கூறி எப்.சியை புதுப்பிக்க
 

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்றின் வீரியம் குறைந்து வருவதால் அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகளும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த ஊரடங்கால் தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த தாண்டவமுத்து என்று ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க 5 மாதங்களாக அண்ணாநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கான கால அவகாசம் முடிவடைந்ததாக கூறி எப்.சியை புதுப்பிக்க இயலாது என்று அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் ஆட்டோவை தீயிட்டு கொளுத்தி தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவத்தை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஓட்டுநர் தாண்டவமுத்துக்கு புது ஆட்டோ வாங்கி கொள்வதற்கான காசோலையை வழங்கினார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக தேர்தல் பணிகளை துவங்க கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது” என்று குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி” என்று விமர்சித்தார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை சாக்லேட் பாய் என்று விமர்சித்தது குறித்து பதிலளித்த உதயநிதி, “சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை அல்ல. அது ஒரு பாராட்டுதலுக்குரிய வார்த்தை. என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஒரு பிளே பாய்” என்று பதிலடி கொடுத்தார்.