Home அரசியல் எந்த பிரச்சனையும் இல்லாமல் முதல்வர் சிறப்பாக ஆட்சியை நடத்தி செல்வார் : அமைச்சர் காமராஜ்

எந்த பிரச்சனையும் இல்லாமல் முதல்வர் சிறப்பாக ஆட்சியை நடத்தி செல்வார் : அமைச்சர் காமராஜ்

2021 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் பணிகளை முக்கிய காட்சிகளான திமுகவும் அதிமுகவும் துவக்கி விட்டன. திமுகவில் இப்போதைக்கு எந்த குழப்பமும் இல்லை என்றாலும் அதிமுகவில் யார் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது. ஓ.பி.எஸ் வேட்பாளாரா அல்லது இ.பி.எஸ் வேட்பாளரா என பல கேள்வி எழுந்து வரும் நிலையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களோ கட்சியின் தலைமை தான் அதனை முடிவு செய்யும் என்று கூறி வருகின்றனர்.

இன்று காலை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, இரண்டு தலைவர்கள் அதிமுகவை தற்போது வழிநடத்தி வருவதாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யார் 2021 ஆம் ஆண்டு முதல்வராக போட்டியிடுவார் என முடிவு செய்வார்கள் என்றும் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் காமராஜ், முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும் எந்த பிரச்னையும் இன்றி முதல்வர் பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்திச் செல்வார் என்றும் எடப்பாடி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாய் ஜாக்கிரதை என்று போர்டு வைப்பதுபோல...

ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே நடந்த கொடுமை .

தனியே வந்த ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் துப்பாக்கியை காமித்து பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி...
TopTamilNews