×

திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் அதே ஊரை சேர்ந்த இமயம் குமாருக்கும் இடையே நிலத்தகராரில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் துப்பாக்கியை பயன்படுத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன், அவரது சகோதரர் நிர்மல், மைத்துனர் வசந்த், ஓட்டுநர் கந்தன், செங்காடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் காயத்ரி தேவி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்
 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் அதே ஊரை சேர்ந்த இமயம் குமாருக்கும் இடையே நிலத்தகராரில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் துப்பாக்கியை பயன்படுத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக  எம்எல்ஏ இதயவர்மன், அவரது சகோதரர் நிர்மல், மைத்துனர் வசந்த், ஓட்டுநர் கந்தன், செங்காடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் காயத்ரி தேவி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தர வதனம் தெரிவித்துள்ளார். இதனிடையே அப்பகுதி மக்கள் எதிர்தரப்பினரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.