15 நாட்கள் நீதிமன்ற காவலில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் புழல் சிறையில் அடைப்பு!

 

15 நாட்கள் நீதிமன்ற காவலில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் புழல் சிறையில் அடைப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் செங்காடு பகுதியில் அமமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தி மற்றும் குமார் என்பவருக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் அரசு நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் உடன் பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

15 நாட்கள் நீதிமன்ற காவலில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் புழல் சிறையில் அடைப்பு!

இதையறிந்த செங்காடு பொதுமக்கள் உதவியுடன் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன், தந்தை லட்சுமிபதி அவர்களை தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது தாண்டவமூர்த்தியின் ஆட்கள் லட்சுமிபதி மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதில் லட்சுமிபதி உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமிபதி, தான் அனுமதிபெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தாண்டவமூர்த்தியை சுட்டதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார் இதைத்தொடர்ந்து இதயவர்மன், அவரது சகோதரர் நிர்மல், மைத்துனர் வசந்த், ஓட்டுநர் கந்தன், செங்காடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

15 நாட்கள் நீதிமன்ற காவலில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் புழல் சிறையில் அடைப்பு!

கைது செய்யப்பட்ட 7 பேரும் செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் காயத்ரி தேவி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.