×

இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் : வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி வேலூரில் மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,319 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 பேர் பலியான நிலையில் 4,863 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வேலூரில் ரூ.3,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் இ-பாஸ் வாங்கித் தருவதாக
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி வேலூரில் மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,319 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 பேர் பலியான நிலையில் 4,863 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் வேலூரில் ரூ.3,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் இ-பாஸ் வாங்கித் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள வேலூர் ஆட்சியர், “இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம்” என்று கூறியுள்ளார்.