இ பாஸ் இல்லைனா வேலைக்கு போக முடியாது! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

 

இ பாஸ் இல்லைனா வேலைக்கு போக முடியாது! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு பொது முடக்கம் நாளை நள்ளிரவோடு முடிவடையும் நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இ பாஸ் இல்லைனா வேலைக்கு போக முடியாது! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடையே பணிக்கு சென்று வர இ-பாஸ் அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 19-க்கு முன்னர் ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ் மற்றும் இதர பாஸ்களை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தலாம். ஜூலை 6-ம் தேதிக்கு பின்னர் மாவட்டங்கள் போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ், இதர பாஸ்களை பெற அவசியமில்லை.