×

சென்னையில் கொரோனா: குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பு

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. கடும் பாதிப்பை விளைவித்த இந்நோய் தொற்று அடுத்து உலகம் முழுவதும் பாதிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கப் படாதபாடு பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றல் அதிகரித்தது. அது விரைவாக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை விளைவித்து வருகிறது. ஆயினும் இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைவோரின்
 

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. கடும் பாதிப்பை விளைவித்த இந்நோய் தொற்று அடுத்து உலகம் முழுவதும் பாதிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கப் படாதபாடு பட்டு வருகின்றன.

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றல் அதிகரித்தது. அது விரைவாக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை விளைவித்து வருகிறது. ஆயினும் இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைவோரின் சதவிகிதம் பெரிய அளவுக்கு உயரவில்லை; கட்டுக்குள்தான் இருக்கிறது என்று நிலை சற்று ஆறுதலை அளிக்கிறது. அதேபோல கொரோனாவிலிருந்து நலம் பெற்று குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் இருந்ததும் ஆசுவாசம் அளித்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் தொடக்க நாள் முதலே கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில்தான் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. அதேபோல குணமடைந்து நலம்பெறுவோரின் சதவிகிதமும் அதிகரித்திருப்பது ஆறுதலை அளிக்கிறது. சென்னையில் மட்டும் 74,969 பேர் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி தினமும் சென்னையின் எந்தப் பகுதிகளில் எத்தனை பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார், எத்தனை பேர் குணமடைந்திருக்கிறார்கள், சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

Increase in recovery percentage

அந்த விவரங்களின் அடிப்படையில் ராயப்புரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் நோய்த் தொற்று அதிகளவில் இருக்கிறது. பாதிக்கப்பட்ட 74,969 பேரில் 55,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18,616 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கிறது.

கடந்த ஒருவாரமாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் கொரோனா நோய் பாதிப்பிலிருந்து நலம் பெறுபவர்களின் சதவிகிதம் அதிகரித்திருகிறது. ஜூலை 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் 62 சதவிகிதமாகவும், ஜூலை 07 ம் தேதி 64 சதவிகிதமாகவும் ஜூலை 08 அன்று 67 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. ஜூலை 09 அன்று 68 சதவிகிதமாகவும் ஜூலை 10 அன்று 71 சதவிகிதமாகவும் உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி கொரோனாவிலிருந்து குணம் அடைபவர்களின் சதவிகிதம் 74 சதவிகிதமாக மேலும் அதிகரித்திருக்கிறது. இது ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.