கிராமங்களிலும் கொரோனா… கமல்ஹாசன் கவலை!

 

கிராமங்களிலும் கொரோனா… கமல்ஹாசன் கவலை!

கிராமங்களிலும் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மக்கள் சிகிச்சைக்காக நகர்ப்பகுதிக்கு வரும் நிலை அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கிராமங்களிலும் கொரோனா… கமல்ஹாசன் கவலை!மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள ட்வீடில், “போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.

http://


சென்னையில் ஊரடங்குக்குப் பிறகு கொரோனா குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, தேனியில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. கிராமங்களிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிகிச்சை பெற வருவதே கடினமாக உள்ளது. இதன் காரணமாக பாதிப்பு, அறிகுறி தெரிந்தும் சிகிச்சை எடுக்க முடியாமல் பலரும் மரணமடைகின்றனர். இவை எல்லாம் கொரோனா மரணக் கணக்கில் வருவதே இல்லை. அரசு நடவடிக்கை எடுத்து உயிர்பலியையும் தொற்று பரவுவதையும் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.