×

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு!

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்து வருவதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது அதன் எதிரொலியாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்து வருவதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது அதன் எதிரொலியாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.  இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் மெயினருவியில் சீற்றத்துடன் தண்ணீர் பாய்ந்து வருகிறது.  இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் குளிக்கவும் அருவியின் அருகே சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அங்கு பாதுகாப்புக்காக போலீசார் அமர்த்தப்பட்டுள்ளனர்.