×

தந்தை மரணம் : கடமை தவறாமல் அணிவகுப்பை ஏற்று நடத்திய பெண் காவல் ஆய்வாளர்!

74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார். இந்நிலையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் தந்தை நாராயணசுவாமி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் . ஆனால் காலை 8 மணிக்கு சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்
 

74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார்.

இந்நிலையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் தந்தை நாராயணசுவாமி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் . ஆனால் காலை 8 மணிக்கு சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கடமை தவறாத காவல் ஆய்வாளர் மகேஸ்வரி யாரிடமும் சொல்லாமல் அணிவகுப்பை முடித்து கொண்டு, பின்னர் தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்படுவதாக கூறிவிட்டு சென்றார். இதனால் அவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.