×

“தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்” : முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் வீரியம் குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வாரங்களாக தென் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகம் காட்டி வந்த நிலையில் தடுப்பு பணி காரணமாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று குறைந்து வருகிறது. அதன்படி அமைச்சர்களும், முதல்வர் பழனிசாமியும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய
 

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் வீரியம் குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வாரங்களாக தென் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகம் காட்டி வந்த நிலையில் தடுப்பு பணி காரணமாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று குறைந்து வருகிறது.

அதன்படி அமைச்சர்களும், முதல்வர் பழனிசாமியும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. பின்னர் அங்குள்ள விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். அரசு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது; கொரோனா பரிசோதனை தமிழகத்தில்தான் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 43,528 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்; அதில் மாற்றமில்லை” என்று உறுதிப்பட தெரிவித்தார்.