×

வணிக வளாகங்களுக்கு இணையான மிகப் பெரிய கடைகளும் நாளை முதல் மூடல் : சென்னை மாநகராட்சி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்களுக்கு இணையான மிகப் பெரிய கடைகளை நாளை முதல் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி கூறும்போது, ‘வணிக வளாகத்தை போன்று பல்வேறு கடைகளில் தனித்தனியே பிரிவுகள் கொண்டு விற்பனைகள் நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய கடைகளில் இதனால் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது கொரோனா பரவுவதற்கு மிகப்பெரிய காரணமாக மாறியுள்ளது. எனவே சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வணிக வளாகம் போன்று பல்வேறு பிரிவுகளைக் கொண்டு தனித்தனியாக இயங்கி வரும் மிகப் பெரிய கடைகளை மறு உத்தரவு வரும்வரை மூடக்கோரி உத்தரவிட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்