கொரோனாவுக்கு வியாபாரி முதல் பலி! உஷார் நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட  நிர்வாகம்

 

கொரோனாவுக்கு வியாபாரி முதல் பலி! உஷார் நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட  நிர்வாகம்

அரியலூரில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பூக்கடை வியாபாரி ஒருவர் பலியாகியுள்ளார். மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாட்டுகளை அதிகரித்துள்ளது நகராட்சி நிர்வாகம்.

கொரோனாவுக்கு வியாபாரி முதல் பலி! உஷார் நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட  நிர்வாகம்

அரியலூர் நகரின் பிரதான கடைவீதியான மங்காய் பிள்ளையார் கோவில் தெருவில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் முருகன். இவருக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் முருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாபாரி முருகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் வியாபாராம் செய்த கடைப்பகுதியில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கடைகளை அடைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் குமரன் உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும்வரை கடைகளை திறக்ககூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கொரோனாவுக்கு வியாபாரி முதல் பலி! உஷார் நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட  நிர்வாகம்

இதைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் கடைஊழியர்கள் அனைவரும் பேருந்துநிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே கொரோனா பரிசோதனை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று நகராட்சி ஆணையர் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு வியாபாரி ஒருவர் முதல் பலியாகி இருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.