சென்னையில் கொரோனா குறைந்து வருகிறது! – கமிஷனர் பிரகாஷ் மகிழ்ச்சி

 

சென்னையில் கொரோனா குறைந்து வருகிறது! – கமிஷனர் பிரகாஷ் மகிழ்ச்சி

சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா குறைந்து வருகிறது! – கமிஷனர் பிரகாஷ் மகிழ்ச்சிசென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000ம் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழக முதல்வர் அறிவித்ததன் அடிப்படையில் சென்னையில் சாலையோர வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் இந்த உதவியைப் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

 

சென்னையில் கொரோனா குறைந்து வருகிறது! – கமிஷனர் பிரகாஷ் மகிழ்ச்சி
முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, சுய கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த வீதிவீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு தொற்று அதிகரிப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா குறைந்து வருகிறது! – கமிஷனர் பிரகாஷ் மகிழ்ச்சிசென்னையில் கொரோனாத் தொற்று உறுதி செய்வோர் எண்ணிக்கை 37 சதவிகிதம் வரை இருந்தது. அது தற்போது 12 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது. மீண்டும் உயர்ந்துவிடாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு இன்றி இதை சாத்தியப்படுத்த முடியாது. முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வது மிகப்பெரிய தவறு என்ற எண்ணம் மக்கள் மனத்தில் பதிய வேண்டும்” என்றார்.