×

ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அன்று ஓட்டல்கள் இயங்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று மற்ற மாவட்டங்களை காட்டிலும் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த ஜூலை மற்றும் இந்த ஆகஸ்ட் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இபாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி
 

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று மற்ற மாவட்டங்களை காட்டிலும் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த ஜூலை மற்றும் இந்த ஆகஸ்ட் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இபாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அன்று ஓட்டல்கள் இயங்க அனுமதிக்க கோரிய வழக்கு ஆகஸ்ட் 31 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக அரசு கூறியதால் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.