திறக்கப்பட உள்ள கோயம்பேடு மார்க்கெட்; துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

 

திறக்கப்பட உள்ள கோயம்பேடு மார்க்கெட்; துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவு பரவியதற்கு முக்கிய காரணம் சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான். மார்க்கெட்டில் வேலை பார்த்த ஒரு சில வியாபரிகளுக்கு கொரோனா பரவியதால், மார்க்கெட்டுக்கு வந்த மக்கள், காய்கறிகள் இறக்குமதி செய்ய வந்த பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. சென்னையிலும் அதிகளவு கொரோனா பரவியதற்கும் இதுவே காரணம். இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது.

திறக்கப்பட உள்ள கோயம்பேடு மார்க்கெட்; துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

ஆனால், கோயம்பேட்டை போல திருமழிசையில் வியாபாரம் நடக்கவில்லை என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது. இதன் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க சிஎம்டிஏ நடவடிக்கை எடுத்தது. மேலும், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க்கெட் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திறக்கப்பட உள்ள கோயம்பேடு மார்க்கெட்டை துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வருவதால், மார்க்கெட் திறக்கப்பட உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.