குணமடைந்தவர் வீட்டில் தகரம் வைத்து அடைத்தது ஏன்? மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

 

குணமடைந்தவர் வீட்டில் தகரம் வைத்து அடைத்தது ஏன்? மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சென்னை குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவருக்கு கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 14 நாட்கள் சிகிச்சை முடிந்து, அவர் கொரோனாவில் இருந்து மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அங்கு வந்த பல்லாவரம் நகராட்சி பணியாளர்கள், அந்த நபர் இருந்த வீட்டை தகரம் வைத்து அடைக்க முயன்றுள்ளனர்.

குணமடைந்தவர் வீட்டில் தகரம் வைத்து அடைத்தது ஏன்? மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இதற்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அவர்கள் தகரத்தை வைத்து அடைத்து விட்டு சென்றுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் அவரது வீட்டை தகரம் வைத்த அடைத்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இது தொடர்பாக சுகாதாரத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குணமடைந்தவர் வீட்டில் தகரம் வைத்து அடைத்தது ஏன் என்பது குறித்து பல்லாவரம் நகராட்சி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.