×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல – அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கால அவகாசம் 8 மாதமே உள்ள நிலையில் அதிமுக கட்சிக்குள் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இந்த விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர்களே வேறுபட்ட கருத்தை கூறி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவை கட்சி உரிய நேரத்தில் எடுக்கும். எடப்பாடி என்றும் முதல்வர் என்று ராஜேந்திர பாலாஜியின் கருத்தை அதிமுகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர்
 

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கால அவகாசம் 8 மாதமே உள்ள நிலையில் அதிமுக கட்சிக்குள் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இந்த விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர்களே வேறுபட்ட கருத்தை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை காசிமேட்டில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவை கட்சி உரிய நேரத்தில் எடுக்கும். எடப்பாடி என்றும் முதல்வர் என்று ராஜேந்திர பாலாஜியின் கருத்தை அதிமுகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.

முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்துக் கூறுவது அதிமுகவை பலவீனப்படுத்துவதாக இருக்கும் என்று கூறிய அவர், பாஜக தலைமையில்தான் கூட்டணி என்ற கருத்தை அதன் மாநில தலைவர் முருகன் கூறவில்லை தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.