“தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” : பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!

“தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” : பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான கால அவகாசம் 8 மாதமே உள்ள நிலையில் அதிமுக கட்சிக்குள் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குழப்பம் தீருவதற்குள் பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

“தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” : பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!

காரணம் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் கூறி பரபரப்பை கிளம்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இதுவரை தமிழகத்தில் திமுக vs அதிமுக என்ற நிலை இருந்த நிலையில் இனிவரும் காலத்தில் பாஜக vs திமுக என்ற நிலை மாறி விட்டது” என்று கூறியுள்ளார்.

“தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” : பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!

பொதுவாக சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட கட்சிகளின் தலைமையில்தான் தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்கும். ஆனால் மரபுக்கு மாறாக தமிழக பாஜக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக ஒருபோதும் சம்மதம் தெரிவிக்காது என்ற போதிலும் பாஜகவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் உறுதியாகும் பட்சத்தில் தான் பாஜக இப்படி தைரியமான ஒரு அறிவிப்பை வெளியிட முடியும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.