×

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது அரசின் கொள்கை முடிவு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களில் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் அரசு ரூ.68 கோடி டெபாசிட் செய்து வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது. இதற்கு ஜெ. தீபா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களில் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் அரசு ரூ.68 கோடி டெபாசிட் செய்து வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது. இதற்கு ஜெ. தீபா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியது அரசின் கொள்கை முடிவு என்றும் கொள்கை முடிவு என்பதால் அதை மறுபரிசீலனை என்ற பரிந்துரையை ஏற்க முடியவில்லை என ஜெயலலிதா இல்லம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.