ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தீபா எங்கே இருந்தார்? நீதிபதிகள் சரமாரி கேள்வி

 

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தீபா எங்கே இருந்தார்? நீதிபதிகள் சரமாரி கேள்வி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை தேர்ந்தெடுக்குமாறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா எதிர் மனுதரராக சேர்க்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாததால் அவர்கள் இரண்டு பேரையும் நேரடி வாரிசாக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தீபா எங்கே இருந்தார்? நீதிபதிகள் சரமாரி கேள்வி

இதனைத்தொடர்ந்து வேதா இல்லத்தை வாங்க நீதிமன்றத்தில் அரசு ரூ.68 கோடி டெபாசிட் செய்ததால், அந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு ஜெ.தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் படி இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ஜெ.தீபா எங்கே இருந்தார்? என தீபாவுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வியை முன்வைத்தனர். மேலும், போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கும் அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர்.