சொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்! எல்லாத்துக்கும் ஓபிஎஸ் தான் காரணம்: ஜெ. தீபா

 

சொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்! எல்லாத்துக்கும் ஓபிஎஸ் தான் காரணம்: ஜெ. தீபா

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, “உயர்நீதிமன்றத்தில் போயஸ் தோட்டத்தை அதிமுக அரசு எடுத்தது தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. போயஸ் இல்லத்தில் உள்ள அசையும் சொத்துக்களை கையக்கப்படுத்தும் முயற்சிக்கு தடை கோரி நான் வழக்கு தொடர்ந்தேன். ஜெயலலிதா சொத்துக்களை அளித்தால் அதனை அறக்கட்டளையாக அமைப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் கொடுத்துள்ளேன். போயஸ் இல்லத்திற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் எழுப்பபட்ட கேள்விக்கு அரசுத் தரப்பில் பதில் இல்லை.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ்காடனுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்ற சித்தரிப்பு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. நான் வேதா இல்லத்தில் தான் பிறந்தேன். 1997இல் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது நானும் தீபக்கும் அவரை சந்தித்தோம். 2014இல் சிறையில் அடைக்கப்பட்ட போது பூங்குன்றன் மூலம் ஜெயலலிதா என்னிடம் பேசினார். நான் ஜெயலலிதாவை அனுகவில்லை என்பதும், எனக்கும் அவருக்கும் தகவல் பரிமாற்றம் இல்லை என்பதும், வேதா இல்லத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் பலர் சித்தரிக்கின்றனர்.

சொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்! எல்லாத்துக்கும் ஓபிஎஸ் தான் காரணம்: ஜெ. தீபா

இது சொத்துக்களுக்கான போராட்டம் அல்ல, ஜெயலலிதா சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை, நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம், உங்களுக்கு என்ன வேண்டும் என எனது அத்தை ஜெயலலிதா பல முறை கேட்டுள்ளார் ஆனால் நாங்கள் அதை நிராகரித்து வந்துள்ளோம். ஜெயலலிதா விரும்பாததால் என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை என்பது இல்லை. சசிகலாவால்தான் போயஸ் இல்லத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை

சசிகலா குடும்பத்தினரால் பல முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். வேதா நிலையம் எங்களின் உடமை அல்ல; எங்களின் உரிமை. இந்த எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான். பன்னீர் செல்வம் நடத்திய தர்மயுத்தம் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. ஜெயலலிதா எப்படி செத்தார்கள் என்பது குறித்து அதிமுக தலைவர்களுக்கு கவலையே இல்லை; இப்போது அவர்களுக்கு தேவை ஒரு நினைவிடம், அந்த ஜெயலலிதா நினைவிடத்தை காட்டி தேர்தலில் ஓட்டு வாங்க முயற்சிக்கிறார்கள். ஆறுமுக சாமி கமிஷனில் 6 முறை ஓ.பி.எஸ் அழைத்தும் அவர் ஆஜராகாதது ஏன்?. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீதிமன்றம் நினைத்தால் வெளிக்கொணர முடியும். நான் இப்போது தெய்வத்தையும் ஜெயலலிதா ஆன்மாவையும்தான் நம்பி உள்ளேன்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா இல்லையா என விசாரிக்கத்தான் ஆறுமுகசாமி கமிஷன் நடத்தப்பட்டுள்ளது. மர்மம் இருக்கிறது என சொன்னால்தான் அடுத்த கட்டமாக வழக்கை விசாரிக்க முடியும். அரசியலில் நான் அனாவசியமாக வந்ததற்கு ஓ.பி.எஸ்தான் காரணம்” எனக்கூறினார்.