×

தமிழகத்தில் முழு ஊரடங்கு… எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கானது வரும் 24 ஆம் தேதி வரை நீடிக்கிறது.இந்த இரண்டு வார ஊரடங்கு காலத்தில் எவையெல்லாம் இயங்கும், இயங்காது என்பதை காணலாம். திருமணம், இறப்பு நிகழ்வு, வேலைவாய்ப்பு, மருத்துவமனை செல்ல உரிய ஆவணங்களுடன் செல்ல அனுமதி ] அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு அனுமதி டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியில்லை
 

தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கானது வரும் 24 ஆம் தேதி வரை நீடிக்கிறது.இந்த இரண்டு வார ஊரடங்கு காலத்தில் எவையெல்லாம் இயங்கும், இயங்காது என்பதை காணலாம்.

திருமணம், இறப்பு நிகழ்வு, வேலைவாய்ப்பு, மருத்துவமனை செல்ல உரிய ஆவணங்களுடன் செல்ல அனுமதி ]

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு அனுமதி

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியில்லை

மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து இயங்க தடை

ஆட்டோ, வாடகை டாக்சிக்கு தடை

தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களுக்கு தடை

மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி, மீன் , தேநீர் கடைகளுக்கு மதியம் 12 மணிவரை அனுமதி

சாலையோர உணவகங்களுக்கு அனுமதியில்லை

ஓட்டல்களில் பார்சல் சேவை உண்டு

அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க தடை

தனியார் நிறுவனங்கள் இயங்க தடை

சுற்றுலா தலங்களுக்கு தடை விதிப்பு