×

விழுப்புரத்தில் அதிகரிக்கும் பாதிப்பு; முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,602 ஆக உயர்ந்துள்ள நிலையில், 993 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அம்மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரத்தில் கொரோனாவால்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,602 ஆக உயர்ந்துள்ள நிலையில், 993 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அம்மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரத்தில் கொரோனாவால் 59 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள நரையூர் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.