‘இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து’.. இணையதளத்தை கலக்கும் Deputy Commissioner-ன் அசத்தல் பதில்!

 

‘இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து’.. இணையதளத்தை கலக்கும் Deputy Commissioner-ன் அசத்தல் பதில்!

திருநெல்வேலி மாவட்டத்தின் Deputy Commissioner-ஆக இருந்து வருபவர் அர்ஜுன் சரவணன். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற வாக்கியத்துக்கு ஏற்றது போலவே, இவருக்கு இணையதளத்தில் ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். காவல்துறைக்கும் மக்களுக்கு இடையேயான சரியான புரிதலை உண்டாக்கி, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டரில் இவர் நெட்டிசன்களுடன் சகஜமாக பேசுவதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

 

இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி ஒன்றை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அதற்கு ஒரு நெட்டிசன் ‘ஒரு போலீஸ் அதிகாரி இதுமாதிரி போஸ்ட் போடுவாறுன்னு நினைக்கல’ என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு அர்ஜுன் சரவணன், “போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே! இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து. #vadiveluforlife #Ilayarajaforsoul” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதில் ரசிகர் பட்டாளத்தினரிடையே ஏக போக வரவேற்பை பெற்றுள்ளது.