பொதுமுடக்கத்தை முன்னிட்டு விழுப்புரம் சுங்கச்சாவடிகளில் தீவிர சோதனை!

 

பொதுமுடக்கத்தை முன்னிட்டு விழுப்புரம் சுங்கச்சாவடிகளில் தீவிர சோதனை!

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலிலுள்ளது.

இதையடுத்து, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் போலீஸ் முகாமிட்டுள்ளனர். அனுமதி இல்லாமல் வரும் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமுடக்கத்தை முன்னிட்டு விழுப்புரம் சுங்கச்சாவடிகளில் தீவிர சோதனை!
விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடயில் ஆய்வாளர் மகேஸ்வரியும் ஓங்குர் சுங்கச்சாவடியில் டிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையிலும் காவலர்கள் தொடர்ந்து வாகனத்தை பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த ஆய்வு நடத்தப்பட்ட போது மும்பையில் இருந்து அனுமதி இன்றி வந்த ஆம்னி பேருந்தைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.