×

2 ஆண்டுகளாக வீடின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய திமுக கவுன்சிலர்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவைக்காவூர் பகுதியை சேர்ந்தவர் துளசி. 60 வயதான இவருக்கு மகன்கள் மற்றும் உறவினர்கள் இருந்தும் இவர் மண் குடிசையில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்த மண் குடிசையும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து அவர் வீட்டின் கூரை பெயர்ந்து வெட்ட வெளியாக மாறியுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூதாட்டி துளசி சாலை ஓரத்திலும், மற்ற வீடுகளின் ஓரங்களிலும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி துளசியின் நிலையை அறிந்த திமுகவை சேர்ந்த பாபநாசம் ஒன்றிய
 

தஞ்சாவூர் மாவட்டம் திருவைக்காவூர் பகுதியை சேர்ந்தவர் துளசி. 60 வயதான இவருக்கு மகன்கள் மற்றும் உறவினர்கள் இருந்தும் இவர் மண் குடிசையில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்த மண் குடிசையும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து அவர் வீட்டின் கூரை பெயர்ந்து வெட்ட வெளியாக மாறியுள்ளது.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூதாட்டி துளசி சாலை ஓரத்திலும், மற்ற வீடுகளின்  ஓரங்களிலும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மூதாட்டி துளசியின் நிலையை அறிந்த திமுகவை சேர்ந்த பாபநாசம் ஒன்றிய கவுன்சிலராக ராம விஜயன் என்பவர் தனது சொந்த செலவில் 25 ஆயிரம் ரூபாயை செலவு செய்து மூதாட்டிக்கு கற்சுவர் மற்றும் சிமெண்டில் ஆன சுவர் எழுப்பி கூரை போட்டு வீடு கட்டி தந்துள்ளார். கவுன்சிலர் ராம விஜயனின் இந்த செயலுக்கு அப்பகுதியில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.