மழைக்கு வீடு சரிந்து விழுந்து பெண் மரணம்! – அரசு வீடு கட்டிக் கொடுத்ததாக கணக்கு உள்ளதால் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பெண் என்று அரசு பதிவில் உள்ள பெண், பழைய குடிசை வீடு இடிந்து விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி அய்யம்மாள். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு ராகுல் காந்தி என்று ஒரு மகனும் உள்ளார். ராகுல் காந்தி 8ம் வகுப்பு படித்து வருகிறான்.


நேற்று அங்கு பெய்த கன மழை காரணமாக அய்யம்மாள் குடிசை சரிந்து விழுந்தது. இதில் வீட்டின் கூரை, சுவர் அய்யம்மாள் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர். அப்போது, இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அரசு வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருவதாக பலரிடம் ஆதார் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் பெற்றுச் சென்றனர். வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் வீடு கட்டித்தரப்படவில்லை. அரசு ஒதுக்கிய நிதியில் வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அய்யம்மாள் உயிரிழந்திருக்க மாட்டார். பணம் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த அய்யம்மாள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...