×

முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், பல அரசியல் நிர்வாகிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனால் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 8 ஆம் தேதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், NPFCL என்ற கைப்பேசி செயலி தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச்
 

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், பல அரசியல் நிர்வாகிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனால் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 8 ஆம் தேதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், NPFCL என்ற கைப்பேசி செயலி தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தத போது, அதில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறியாமல் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டார். அன்று மாலை அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன் படி நேற்று முதல்வர் பழனிசாமி உட்பட முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும், நேற்று பரிசோதனை நடைபெற்ற யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதும் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளது.