முதல்வர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!- முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

 

முதல்வர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!- முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

முதல்வர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!- முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நடக்கிறது. இதில், தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.