அடங்காத கொரோனா! செய்வதறியாது திணறும் அரசு!! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் 78,573 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 1,291 பேருக்கும் திண்டுக்கல்லில் 789 பேருக்கும் திருநெல்வேலியில் 1,875 பேருக்கும், ஈரோட்டில் 422, திருச்சியில் 1,598 பேருக்கும், நாமக்கல் 189 மற்றும் ராணிப்பேட்டை 1,635, செங்கல்பட்டு 8,283, மதுரை 6,539, கரூர் 202, தேனி 1,863 மற்றும் திருவள்ளூரில் 6,930 பேருக்கு, தூத்துக்குடியில் 2,385, விழுப்புரத்தில் 1,602 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 263 பேருக்கும், திருவண்ணாமலையில் 3,162, தருமபுரியில் 258 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் 308, கடலூர் 1,551, மற்றும் சேலத்தில் 1,967, திருவாரூரில் 767, நாகப்பட்டினம் 374, திருப்பத்தூர் 431, கன்னியாகுமரியில் 1,491 மற்றும் காஞ்சிபுரத்தில் 3,979 பேருக்கும், சிவகங்கை 891 மற்றும் வேலூரில் 2,902 பேருக்கும், நீலகிரியில் 222 பேருக்கும், தென்காசி 721, கள்ளக்குறிச்சியில் 1,847 பேருக்கும், தஞ்சையில் 709, விருதுநகரில் 2,099, ராமநாதபுரத்தில் 1,892 பேருக்கும், அரியலூர் 513 மற்றும் பெரம்பலூரில் 177 பேருக்கும், புதுக்கோட்டையில் 673 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...