×

மாஞ்சா நூல் பயன்பாட்டை தடுக்க தனிப்படைஅமைப்பு : சென்னை காவல் ஆணையர் தகவல்!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி யுள்ளனர். இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் தற்போது மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். மாடிக்களில் நின்று கொண்டு இதுபோன்ற விஷம வேலைகளில் ஈடுபடுவோர் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார்கள். அதேபோல் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சைபர் குற்றங்ககளை தடுக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்
 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி யுள்ளனர். இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் தற்போது மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

மாடிக்களில் நின்று கொண்டு இதுபோன்ற விஷம வேலைகளில் ஈடுபடுவோர் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார்கள். அதேபோல் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் சைபர் குற்றங்ககளை தடுக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள அவர், மாஞ்சா நூல் பயன்பாட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.