மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஊரடங்கை சமாளிக்க மக்கள் பல பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பட்டம் விடுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. முக்கியமாக சென்னை மற்றும் வட சென்னை பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகமாக மாஞ்சா நூல் வைத்து பட்டம் விட்டு வருகின்றனர். அந்த மாஞ்சா நூலால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

இதனிடையே சென்னையில் மாஞ்சா நூல் நூலில் பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பட்டம் விட்டதால் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.