×

“தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம்” : இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது . அந்த வகையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் நீடித்து வருவதால் அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை நிறுவும், அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகி சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 1.5 லட்சம் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி சிலை அமைக்கப்படும் என்றார்.

இந்நிலையில் தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம் என்ற இந்து முன்னணி மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ஐடி நிறுவன மேலாளர் இளஞ்செழியன் தாக்கல் செய்த மனுவில், 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் என இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.