Home தமிழகம் ஆட்டத்துக்கு தயாராகும் இந்து முன்னணி... விநாயகர் சிலை வைக்கப்படும் என்று அறிவிப்பு!

ஆட்டத்துக்கு தயாராகும் இந்து முன்னணி… விநாயகர் சிலை வைக்கப்படும் என்று அறிவிப்பு!

அரசு உத்தரவை மீறி தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்படும் என்று இந்து முன்னணி அறிவித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு சென்னை தெருக்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவிக் கொண்டாடவும், நீர்நிலைகளில் கரைக்கவும் சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்திருந்தது. கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை என்பதாலும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளதாலும் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டது.
மிக பிரம்மாண்டமான முறையில் விழா நடைபெறும் மும்பையிலேயே பெரிய சிலைகள் அமைக்க மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது. தற்போதைய

நிலையை உணர்ந்து பல அமைப்புக்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. அடுத்த ஆண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் என்று கூறி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சிலை அமைக்கப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ளார்.

http://

இதன் மூலம், விநாயகர் அரசியலில் பா.ஜ.க-வும் ஈடுபடத் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் இப்போதே சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டனர்.

வழக்கமாக விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்புதான் பந்தல் அமைக்கும் பணியைத் தொடங்குவார்கள். அடுத்த சனிக்கிழமை விழாவுக்கு இப்போதே பந்தல் அமைக்க ஆரம்பித்திருப்பதன் மூலம் ஏதோ ஒரு முடிவுடன் இருப்பது போல உள்ளது.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தத் தடையில்லை. அவரவர் வீட்டிலேயே சிறப்பான முறையில் கொண்டாட யாருடைய அனுமதியும் தேவையில்லை.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், பக்ரீத், ஈஸ்டர் என அனைத்து விழாக்களும் அவரவர் வீடுகளிலேயே கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்துக்குக் கூட மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட தீவிர வலதுசாரி அமைப்புகள் தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.
Do NOT follow this link or you will be banned from the site!