×

பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனால் ஓபிஎஸ்- சசிகலா என கட்சி இரண்டாக பிளந்தது. பின்னர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவருக்கும் ஏற்பட்ட
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனால் ஓபிஎஸ்- சசிகலா என கட்சி இரண்டாக பிளந்தது. பின்னர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவருக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி சசிகலா ஓரம் கட்டப்பட்டு கட்சியின் தலைமை பன்னீர்செல்வம் என்றும் ஆட்சியின் தலைமை எடப்பாடி பழனிசாமி என்றும் முடிவானது. அதன்படி கடந்த நான்கு வருடமாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

ஆனால் 2021 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில காலங்களில் நடைபெற இருப்பதால் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நான்கு வருட காலகட்டத்தில் ஆட்சியை திறம்பட நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்த ஓ.பன்னீர்செல்வம் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய ஆளுமை என்றும் அவரே நிரந்தர முதல்வர் என்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்து வரும் அரசியல் விமர்சகர்கள் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவியை விட்டுத் தர மனமில்லை என்பது கிடையாது என்றும் அவர் விட்டுக் கொடுத்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக திறம்பட செயலாற்றினார் என்றும் கூறிவருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் உள்ள குழப்பத்தை நீக்க ஓ.பன்னீர்செல்வம் – பழனிசாமி இருவரும் வாய் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க எடப்பாடி பழனிசாமி இந்த நான்கு வருட காலகட்டத்தில் ஆட்சியை திறம்பட நடத்தி தேர்தல்களை கட்சியை கொண்டு வந்துள்ளதால் அவரையே அடுத்த முதல்வர் வேட்பாளராக கட்சி அறிவிக்கும் என்றும் உறுதிபட கூறுகிறார்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் இது தேவையற்ற குழப்பம் என்றும் சிலர் தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு தரப்புக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.