‘அடுத்த முதல்வர் ஒபிஎஸ் தான்’ என ஓட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. தேனியில் பரபரப்பு!

 

‘அடுத்த முதல்வர் ஒபிஎஸ் தான்’ என ஓட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. தேனியில் பரபரப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. இதற்கு கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், அதிமுகவில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. அதாவது அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?. சமீப காலமாக இந்த விவகாரம் பேச்சு பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதனிடையே பழனிசாமிக்கு ஆதரவாக நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டது. இதுமட்டுமில்லாமல் ஓபிஎஸ்க்கு ஆதரவாக தேனி மாவட்டம் போடி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

‘அடுத்த முதல்வர் ஒபிஎஸ் தான்’ என ஓட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. தேனியில் பரபரப்பு!

அதனால் தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரு புறம் ஆலோசனை நடைபெற்று வரும் இந்த நிலையில், தேனி பெரியகுளம் தென்கரையில் இருக்கும் ஓபிஎஸ் இல்லத்தின் அருகே ஓட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பும் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அதிமுகவினரிடையே பரபரப்பு நீடிக்கிறது.