×

புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593ஆக உயர்வு !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், புதுச்சேரிக்குள் வருபவர்களும், புதுச்சேரியில் இருந்து செல்பவர்களும் கட்டாயம் இ- பாஸ் பெற வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில்
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், புதுச்சேரிக்குள் வருபவர்களும், புதுச்சேரியில் இருந்து செல்பவர்களும் கட்டாயம் இ- பாஸ் பெற வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3593 ஆக அதிகரித்துள்ளது.